உயிர் காக்க பழகு
இன்றைய செய்தித்தாளில் மருத்துவமனையில் தீ பற்றி உடல் கருகி 13 பேர் மரணம் என்று செய்தி.உறவினர்கள் கதறி அழும் காட்சி. பாவம்! என இரண்டு நிமிட அனுதாபத்திற்கு பிறகு அடுத்த தாளில் கிரிக்கெட் அணி வென்றது என்ற செய்தியை பார்த்தவுடன் மகிழ்ச்சி. இன்றைய மனிதம் அவ்வளவுதான்.... சரி வேறு என்ன செய்வது நீங்கள் சொல்வது சரிதான்.இன்றைய சூழலில் நாம் வேறு என்ன செய்ய முடியும்? மறுபடி அவ்வாறு நடக்காதவாறு இருக்க என்ன செய்ய வேண்டும் என்று எண்ண வேண்டும். முறையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாததும் அவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததும் காரணம். இவை எழுத்து வடிவில் இருப்பது வேதனைக்குரியது. பாதுகாப்பு வழிமுறையை மேம்படுத்தி அதை முறையாக பின்பற்ற பழக்கி கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் மட்டும் அல்ல அனைத்து துறைகளிலும் செயல்பட பழக்கி கொள்ள வேண்டும். அரசும் இதற்கு தனியாக பயிற்சி தந்து பாதுகாப்பு அம்சங்களுக்காக பணியாட்கள் அமர்த்தி நடைமுறை படுத்த வேண்டும். இதை யாதொரு உயர் அதிகாரியோ , அரசாங்கமோ , அமைப்போ அதற்கான முயற்சியை எடுத்தால் மிகவும் மகிழ்ச்சி!