Invention - New
இளம் தலைமுறையினர் கண்டிப்பாக அதிகம் வர வேண்டிய துறை. நம் ஆராய்ச்சி எதை நோக்கி செல்கிறது? வளர்ச்சி! நம்முடைய ஆராய்ச்சி ஒரு தொழிலாளி அதிக பாதுகாப்புடனும் வேலை சுமையை குறைப்பதாகவும் இருக்க வேண்டுமே தவிர நான்கு பேர் செய்ய கூடிய வேலையை எவ்வித மனித ஆற்றலும் இல்லாமல் செய்ய கூடாது. ஆட்கள் எண்ணிக்கையை குறைக்கும் இடமும் உண்டு யாதெனில் எங்கே ஓரு இடத்தில் அவசர தேவையும், அவசர காலத்தில் அதிகளவிலான உற்பத்தி தேவைப்படும் இடங்களில், அதிவேக கண்டுபுடிப்பை பயன்படுத்தலாம். நண்பர்களே! சிந்தியுங்கள் சிறு சிறு தொழிலாளிக்கும், நோயாளிக்கும், உதவுமாறும் நோயற்ற தன்மை உருவாகவும் எந்த குறைபாடும் இல்லாத சமுதாயத்தை உருவாக்கவும் உங்கள் திறமைகளை பயன்படுத்துங்கள். விண்வெளி ஆராய்ச்சியுடன் நின்று விடாதீர்கள். தினசரி வாழ்க்கையில் மக்களுக்கும் தொழிலார்களுக்கும் உதவும் படைப்புகளும் படைப்புகளே. இது வரலாற்று புத்தகத்தில் மட்டுமல்ல மக்களின் மனங்களிலும் பதிய செய்யும். வளர்க மனிதம்